கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
23

கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை..

கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை..

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 89 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சபையின் ஒருங்கிணைப்பாளர் வணக்கத்துக்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் இன்று (23) கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல். திருமதி மஹவத்த ஆணையின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

சந்தேக நபரை பிணையில் விடுவிக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்தார்.

 

எனவே சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதன்படி, கல்வெவ சிறிதம்ம தேரரை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட மேலதிக நீதவான், அவரை மாதத்திற்கு ஒரு முறை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

 

சந்தேக நபரான தேரருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து எதுவும் தெரிவிக்க வேண்டாம் எனவும், வன்முறையில் ஈடுபட்டதாக முறைப்பாடு செய்தால் அவரது பிணையை இரத்துச் செய்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

views

105 Views

Comments

arrow-up