1700 ரூபா சம்பளம் தொடர்பான வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரை முறைப்பாடுகள் இல்லை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
15

1700 ரூபா சம்பளம் தொடர்பான வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரை முறைப்பாடுகள் இல்லை

1700 ரூபா சம்பளம் தொடர்பான வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரை முறைப்பாடுகள் இல்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என தொழில் திணைக்களம் தெரிவித்தது. 

 

கடந்த 30 ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் ஆட்சேபனையினை தெரிவிக்கும் காலம் நாளையுடன் நிறைவடைகின்றது.

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்கும் வகையில், தொழில் ஆணையாளரால் கடந்த 30 ஆம் திகதி வர்த்தமானி வெளியிடப்பட்டது. 

 

குறித்த வர்த்தமானி தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளோ, ஆட்சேபனைகளோ கிடைக்கவில்லை என தொழில் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் நியூஸ்ஃபெஸ்டுக்கு தெரிவித்தார். 

 

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள 1700 ரூபா தொடர்பிலான, ஆட்சேபனைகள் அல்லது எதிர்ப்புகளை தெரிவிக்கும் கால அவகாசம் நாளை நிறைவடைந்த பின்னர், அது தொடர்பிலான அறிக்கையை தொழில் அமைச்சருக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தொழில் திணைக்கள அதிகாரி குறிப்பிட்டார். 

 

எனினும், இது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை அமைச்சரே எடுப்பார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

 

நாளைய தினம் வரை பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து எவ்வித ஆட்சேபனைகளோ எதிர்ப்புகளோ தெரிவிக்கப்படாத பட்சத்தில், சம்பளம் தொடர்பில் தொழில் அமைச்சர் தீர்மானமொன்றை எடுப்பார் எனவும் அவர் கூறினார். 

views

205 Views

Comments

arrow-up