கடுவளையில் புதிய எரிவாயு முனையம்

லிட்ரோ நிறுவனத்தின் புதிய எரிவாயு முனையமொன்று கடுவளை - மாபிம பகுதியில் இன்று(08) திறந்துவைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நாளாந்தம் 60,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியுமென அவர் குறிப்பிட்டார்.
தற்போது செயற்படுத்தப்படும் கெரவலப்பிட்டிய எரிவாயு முனையத்தின் ஊடாக நாளாந்தம் ஒரு இலட்சம் சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன.
எனினும், நாட்டின் இன்றைய தேவையைப் பூர்த்தி செய்வதற்கு கெரவலப்பிட்டிய முனையம் மாத்திரம் போதாது என்பதனால், புதிய முனையத்தை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்டத்தில் மாபிம முனையத்தை வார இறுதியில் மாத்திரம் செயற்படுத்துவதற்கும் படிப்படியாக அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கெரவலப்பிட்டிய முனையத்தை பராமரிப்பு பணிகளுக்காக மூட வேண்டிய நிலை ஏற்பட்டாலும் மாபிம முனையத்தினூடாக முழுமையான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
206 Views
Comments