டயனா கமகே தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதை தடுக்கும் வகையில் ரிட் கட்டளை

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதை தடுக்கும் வகையில் இன்று(08) உயர் நீதிமன்றம் ரிட் கட்டளை பிறப்பித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல லக்மால் ஹேரத், இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பிரித்தானிய பிரஜாவுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்தாணை மனு மீதான விசாரணையின் பின்னர் வழங்கப்பட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மை தீர்ப்பை ஆட்சேபனைக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பான விசாரணையை நிறைவு செய்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
216 Views
Comments