மன்னா ரமேஷை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 'மன்னா ரமேஷ்' என அழைக்கப்படும் ரமேஷ் பிரியஜனகவை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3 நாட்கள் தடுத்து வைத்து சந்தேகநபர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
ரமேஷ் பிரியஜனக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் துபாயில் கைது செய்யப்பட்டு நேற்று(07) அதிகாலை நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்.
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 32 வயதான சந்தேகநபர், அவிசாவளை, யாலகம, நபாவெல பகுதியைச் சேர்ந்தவராவார்.
கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
215 Views
Comments