கிளிநொச்சியில் தங்க பிஸ்கட்களுடன் மூவர் கைது

கிளிநொச்சி நகரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் தங்க பிஸ்கட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கருகில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 4 கிலோ 170 கிராம் எடையுடைய தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மற்றும் வவுனியா பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
224 Views
Comments