சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த யோசனைகளின் அடிப்படையில் தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்துள்ள பிரேரணையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையில் ஜனாதிபதியின் இராஜினாமாவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது, தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காணும் அடிப்படைத் தேவையாகக் கருதப்படுகிறது.
294 Views
Comments