பொது போக்குவரத்து சேவைகள் வழக்கம் போல்...

மே தினத்தை முன்னிட்டு இன்றும் (01) வழமையான பொது போக்குவரத்து சேவைகள் இயங்கி வருகின்றன.
கிராமிய மற்றும் தொலைதூர சேவைகளை வழமை போன்று இயக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஏ.எஸ்.பி.வீரசூரிய தெரிவித்தார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா, பேருந்து சேவைகள் வழமை போன்று இயங்கும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, ஞாயிற்றுக்கிழமைகளில் புகையிரதங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
402 Views
Comments