புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையில் இருந்து முதல் குழு மக்கா பயணம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
21

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையில் இருந்து முதல் குழு மக்கா பயணம்

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையில் இருந்து முதல் குழு மக்கா பயணம்

2024 ஆம் ஆண்டுகான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான முதல் குழுவினர்  இலங்கையில் இருந்து  மக்கா நோக்கி இன்று (22) காலை சென்றனர்.

 

2024 ஆம் ஆண்டுகான புனித ஹஜ் கடமை நிறைவேற்றுவதற்காக இம்முறை 3500 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது. 

 

இதன் பிரகாரம், 68 பேர் கொண்ட முதலாவது குழுவினர் இன்று மக்கா நோக்கி சென்றனர்.

 

இவர்களை வழியனுப்பும் நிகழ்வில் புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலிட் ஹமட் அல் கந்தானி , ஹஜ் குழுவின் தலைவர் , முஸ்லிம்  பண்பாட்டலுவல்கள் திணைக்கள  அதிகாரிகளும்  கலந்து கொண்டிருந்தனர்.

views

222 Views

Comments

arrow-up