ட்ரோன்கள் மூலம் காடழிப்பில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவுள்ள வனப்பாதுகாப்பு திணைக்களம்

காடழிப்பு தொடர்பில் கண்காணிப்பதற்காக இன்று (14) முதல் ட்ரோன்களை பயன்படுத்தவுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வனப்பாதுகாப்பு ஆணையாளர் நிஷாந்த எதிரிசிங்க குறிப்பிட்டார்.
இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, முல்லைத்தீவு, மொனராகலை, மட்டக்களப்பு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக வனப்பாதுகாப்பு ஆணையாளர் நிஷாந்த எதிரிசிங்க குறிப்பிட்டார்.
இதன் மூலம் மரம் வெட்டுதல், அனுமதியற்ற பயிர்ச்செய்கைகள் மற்றும் கஞ்சா வளர்ப்பு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த முடியும் என நிஷாந்த எதிரிசிங்க தெரிவித்தார்.
202 Views
Comments