குணதிலக்க ராஜபக்ஸ தாக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரிடம் வாக்குமூலம் பதிவு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
08

குணதிலக்க ராஜபக்ஸ தாக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரிடம் வாக்குமூலம் பதிவு

குணதிலக்க ராஜபக்ஸ தாக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரிடம் வாக்குமூலம் பதிவு

குணதிலக்க ராஜபக்ஸ தாக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

பாராளுமன்ற வளாகத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களான சஹன் ப்ரதீப், மதுர விதானகே மற்றும் லலித் வர்ணகுமார ஆகியோரிடமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

 

வாக்குமூலங்கள் தொடர்பில் விரைவில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

எவ்வாறாயினும், தாக்குதலை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்படவில்லை என பொலிஸார் கூறினர்.

 

கடந்த திங்கட்கிழமை மாலை, ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

 

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸவின் கால் உடைந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

views

191 Views

Comments

arrow-up