JUN
08
எந்தேரமுல்லயில் ரயிலுடன் கார் மோதியதில் இருவர் பலி

எந்தேரமுல்ல ரயில் கடவையில் காரொன்று ரயிலுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பதுளையிருந்து கோட்டை நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலுடன் கார் இன்று (08) காலை 6 மணியளவில் மோதி விபத்திற்குள்ளானது.
விபத்தில் 54 வயதான ஆணும் 34 வயதான பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
ராகம போதனா வைத்தியசாலையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன
186 Views
Comments