Sea Of Sri Lanka கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Sea Of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பை அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 17ஆம் திகதி 21 இந்திய மீனவர்கள் காரைநகர் கடற்பரப்பில் வைத்து 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், மேலும் 4 குற்றச்சாட்டுகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு இன்று(01) ஊர்காவற்றுறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் ஒரு படகிற்கான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், 10 மீனவர்களுக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
கடற்படையினரை தாக்கி சிறுகாயம் விளைவித்தமை, சட்டவிரோதமாக கூட்டம் கூடியமை, அரச கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இன்று மன்றில் ஆஜரான பொலிஸார், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தமைக்காக 378,000 ரூபா நட்டஈடு கோரி மேலதிக அறிக்கையை தாக்கல் செய்தனர்.
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த காரணத்தினால் அவர்களை பிணையில் விடுவிக்க முடியாது என உத்தரவிட்ட நீதவான், மீனவர்களை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
230 Views
Comments