ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு இன்று(25) முதல் காலை உணவு

தரம் 1 முதல் 5 வரை ஆரம்பப்பிரிவில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் இன்று(25) முதல் ஆரம்பிக்கப்படுகின்றது.
காலை 7.30 க்கும் 8.30 க்கும் இடையில் இந்த உணவு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
9,134 அரச பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கும் நூறுக்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இந்த உணவு வழங்கப்படவுள்ளது.
இதற்காக 16.6 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.
மேலும், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாய திணைக்களம் ஆகிய அமைப்புகள் இதற்கான அனுசரணையை வழங்குகின்றன.
222 Views
Comments