இன்று அமெரிக்காவில் IMF உடன் பேச்சுவார்த்தை...

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (18) வாஷிங்டனில் ஆரம்பமாகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடனான முதல் கட்ட கலந்துரையாடல் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கடந்த வாரத்தில் இருந்து கிட்டத்தட்ட ஆறு நாட்களாக ஆன்லைனில் தொழில்நுட்ப கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களுக்காக நேற்றைய தினம் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைக் குழுவில் நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தன ஆகியோர் அடங்குவர்.
நிதியமைச்சர் அலி சப்ரி சமீபத்தில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு, சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) 4 பில்லியன் டொலர் உதவியை திரட்டுவதற்கான பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் என்று கூறினார்.
481 Views
Comments