வெளிநாட்டு கடன் தவணை மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
12

வெளிநாட்டு கடன் தவணை மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது

வெளிநாட்டு கடன் தவணை மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது

வெளிநாட்டு கடன் தவணை மற்றும் வட்டியை மீளச் செலுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் கடன் மறுசீரமைப்பு குறித்து கவனம் செலுத்தப்படும் என்றார்.

 

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுடன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இதன்போது வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவது முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்துவதை விட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

 

எரிபொருள், எரிவாயு, மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்றார்.

 

இதேவேளை, வர்த்தக வங்கிகளில் இருந்து இலங்கை மத்திய வங்கிக்கு ஏற்றுமதி வருமானத்தை கட்டாயமாக மாற்றுவதை 50% இலிருந்து 25% ஆக குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

 

மீதமுள்ள 25% வங்கிகள் அத்தியாவசிய இறக்குமதிக்கு பயன்படுத்தப்படும், என்றார்.

 

உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு பணத்தை அனுப்புமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் மத்திய வங்கியின் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அநாவசியமாக பணம் செலவழிக்கப்பட மாட்டாது என்றும், இந்நாட்டு மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு இந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

views

533 Views

Comments

arrow-up