கொட்டித் தீர்க்கப்போகும் மழை - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
30

கொட்டித் தீர்க்கப்போகும் மழை - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொட்டித் தீர்க்கப்போகும் மழை - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் (Department of Meteorology ) இன்று (30.04.2025) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

மத்திய, ஊவா, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

views

6 Views

Comments

arrow-up