மாத்தறை சிறைச்சாலையில் அமைதியின்மை ; வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் நேற்றிரவு(22) ஏற்பட்ட பதற்றநிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு கைதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையிலிருந்த 250 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் மூவரின் நெருங்கிய சிலரை மாத்தறை சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளால் வான்நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை அடுத்து மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டதுடன் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறைச்சாலையின் இருகூடங்களின் கதவுகளை உடைத்துக்கொண்டு வௌியே வருவதற்கு கைதிகள் முயற்சித்த போது ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காகவே கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குழப்பநிலைமை காரணமாக கைதிகளுக்கான உணவுக்களஞ்சியமும் சேதமடைந்துள்ளது.
250 Views
Comments