உள்ளூராட்சி மன்ற தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு இன்று(24) ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு இன்று(24) ஆரம்பமாகின்றது.
தபால்மூல வாக்களிப்பு இன்று(24), நாளை(25), எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ தலதா காட்சிப்படுத்தலை முன்னிட்டு விசேட கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக விசேட தபால் வாக்களிப்பு மத்திய நிலையம் கண்டியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கண்டி உயர் மகளிர் வித்தியாலயத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முப்படையினருக்கும் அந்தந்த இராணுவ முகாம்களில் தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 Views
Comments