டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை

அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்காக சில பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கொலன்னாவ சாலமுல்ல பகுதியிலுள்ள வீட்டில் இருந்தபோது நேற்றிரவு அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சைகளின் போது அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
39 வயதான டான் பிரியசாத் வெல்லம்பிட்டிய மீதொட்டமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
மோட்டார் சைக்கிளில் வருகைதந்த 2 சந்தேகநபர்கள் கைத்துப்பாக்கியினால் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டேன் பிரியசாத்தின் உடல் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
81 Views
Comments