நாவலப்பிட்டியில் வௌிநாட்டவர்கள் மீது தாக்குதல் : பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் விசாரணை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
07

நாவலப்பிட்டியில் வௌிநாட்டவர்கள் மீது தாக்குதல் : பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் விசாரணை

நாவலப்பிட்டியில் வௌிநாட்டவர்கள் மீது தாக்குதல் : பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் விசாரணை

நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

 

ரயில்வே பொது முகாமையாளர் H.M.K.பண்டாரவினால் இன்று(07) இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

குறித்த சம்பவம் தொடர்பில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இருவர் மற்றும் கட்டுப்பாட்டாளரும் மீண்டும் சேவையில் இணைந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் N.J.இதிபொல தெரிவித்தார்.

 

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இடைக்கால விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

 

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயிலில் பயணித்த 2 இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகளே தாக்கப்பட்டிருந்தனர்.

 

இந்த சம்பவம் தொடர்பில் ரயில்வே ஊழியரொருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

views

222 Views

Comments

arrow-up