செங்கடலில் சரக்கு கப்பல் மீது ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - மூவர் பலி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
07

செங்கடலில் சரக்கு கப்பல் மீது ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - மூவர் பலி

செங்கடலில் சரக்கு கப்பல் மீது ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - மூவர் பலி

செங்கடலில் சரக்கு கப்பல் மீது ஹுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 3 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

 

யேமனின் ஏடன் துறைமுகத்தில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் Barbados கொடியுடன் பயணித்த கப்பல் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

தாக்குதலின் போது 20 பணியாளர்கள் மற்றும் 3 பாதுகாப்பு தரப்பினர் கப்பலில் இருந்துள்ளனர்.

 

அவர்களில் இருவர் இலங்கையர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

 

தாக்குதலை தொடர்ந்து கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

 

கப்பலில் இருந்த ஏனைய உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்த நிலையில், கப்பலில் இருந்த இலங்கையர்கள் தொடர்பில் கடற்படை மற்றும் வெளிவிவகார அமைச்சிடம் வினவிய போது, தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்த இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் பெறப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

views

223 Views

Comments

arrow-up