தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திகள் நேரம் பார்த்து காத்திருந்ததாக கோட்டாபய ராஜபக்ஸ
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
06

தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திகள் நேரம் பார்த்து காத்திருந்ததாக கோட்டாபய ராஜபக்ஸ

தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திகள் நேரம் பார்த்து காத்திருந்ததாக கோட்டாபய ராஜபக்ஸ

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்தே சில  சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திகள் தன்னை  ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு நேரம் பார்த்து காத்திருந்ததாக  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 

 

'ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றும் சதி' என்ற பெயரில் நாளை (07) வெளியிடப்படவுள்ள தனது நூலில்  இந்த உண்மைகளை வெளிக்கொணரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நாடு சுதந்திரமடைந்து முதல் 60 வருடங்களுக்குள் ஒருபோதும் அனுபவித்திராத வகையில், இன்று நாட்டிற்குள் சர்வதேச தலையீடுகள் காணப்படுவதாகவும் உள்ளக அரசியலை வௌித்தரப்பினர்  கையாள்வதாகவும்  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். 

 

ஜனாதிபதி பதவியில் இருந்து தன்னை அகற்றும் அரசியல் இயக்கம்,  சுதந்திரம் கிடைக்கப்பெற்ற பின்னர் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அமைதியான அதிகாரப் பரிமாற்றங்களை மாத்திரம் அனுபவித்திருந்த இலங்கை அரசியலுக்கு புதிய பரிமாணத்தை இணைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 

 

இதன் காரணமாக 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் இந்நாட்டின் அரசியல் எதிர்காலத்திற்கு பாரிய பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் விடயம் என கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 

 

சர்வதேச அனுசரணையுடன் ஆட்சியை  மாற்றும் செயற்றிட்டம் தொடர்பிலான நேரடி அனுபவமே நாளை (07) வௌியிடப்படவுள்ள தனது நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

views

235 Views

Comments

arrow-up