தபால் விநியோக ஊழியர் பற்றாக்குறையால் கடித விநியோகத்தில் தாமதம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
02

தபால் விநியோக ஊழியர் பற்றாக்குறையால் கடித விநியோகத்தில் தாமதம்

தபால் விநியோக ஊழியர் பற்றாக்குறையால் கடித விநியோகத்தில் தாமதம்

தபால் விநியோக ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடித விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

 

ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தபால்மா அதிபர் P.சத்குமாரவிடம் வினவிய போது, தபால் விநியோக ஊழியர்களின் பற்றாக்குறையினால் சில நாட்கள் தாமதத்தின் கீழ் சில மாகாணங்களில் கடிதங்களை விநியோகிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறினார். 

 

வலயங்களாகப் பிரித்து கடிதங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். 

 

தபால் விநியோக ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 2000 ஊழியர்களுக்கு வெற்றிடம் காணப்படுவதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார். 

 

பெரும்பாலான அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளமை மற்றும் புதிய அதிகாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமை ஆகிய காரணங்களால் தபால் சேவையில் சில நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

views

258 Views

Comments

arrow-up