அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் உடைந்து வீழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் Baltimore நகரிலுள்ள Francis Scott Key பாலம் உடைந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
2.6 கிலோமீட்டர் நீளமான இந்த பாலத்தின் தூணொன்றை சரக்கு கப்பலொன்று மோதியதையடுத்து பாலம் உடைந்து வீழ்ந்துள்ளது.
பாலத்துடன் மோதுவதற்கு முன்னர் அந்த கப்பலில் மின்சார கோளாறு ஏற்பட்டிருந்ததாகவும் அபாய உதவி அழைப்பை அது விடுத்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Francis Scott Key பாலத்தை கப்பல் மோதிய போது, அதில் ஏராளமான வாகனங்கள் பயணித்துள்ளன.
இலங்கை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்த கப்பலில், துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்சார விநியோகம் முழுவதும் அற்றுப்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
232 Views
Comments