அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் உடைந்து விபத்து

அமெரிக்காவின் மேரிலேண்ட் (Maryland) மாகாணத்தில் உள்ள பால்டிமோரில் (Baltimore) Francis Scott பாலத்தில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் (Francis Scott ) என்ற மிகப்பெரிய பாலம் ஒன்று உள்ளது.
இன்று (26) காலை இந்த பாலத்தின் மீது பெரிய சரக்கு கப்பல் ஒன்று திடீரென மோதி விபத்திற்குள்ளானது.
சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த டாலி (Dali) என்ற பெயரிலான சரக்கு கப்பல் பால்டிமோர் வழியாக இலங்கைக்கு பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் பாலத்தின் ஊடான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பாலத்தின் மீது மோதிய வேகத்தில் கப்பல் தீப்பிடித்து நீரில் மூழ்கியுள்ளது.
பாலம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் ஆற்றில் வீழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆற்றில் விழ்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து வெளியாகியிருக்கும் CCTV காட்சிகளில், பாலத்தின் மீது கப்பல் ஒன்று மோதுவதும், அதனைத் தொடர்ந்து பாலாப்ஸ்கோ ஆற்றின் மீது இருந்த பாரம்பரியம் மிக்க குறித்த பாலம் ஆற்றுக்குள் சரிந்து வீழ்வதும் பதிவாகியுள்ளது.
262 Views
Comments