வங்கி வட்டி வீதங்கள் குறைவடையும்: மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
26

வங்கி வட்டி வீதங்கள் குறைவடையும்: மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

வங்கி வட்டி வீதங்கள் குறைவடையும்: மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டதன் மூலம் வங்கி வட்டி வீதங்களும் குறைவடையும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

 

வங்கிகளுடனான பரிவர்த்தனைகளின் போது, மத்திய வங்கி அறவிடும் வட்டி வீதங்கள் அல்லது கொள்கை வட்டி வீதங்களை 50 அடிப்படை புள்ளிகளால் அல்லது 5 சதவீதத்தால் குறைப்பதற்கு நேற்று (25) கூடிய மத்திய வங்கியின் நாணயச்சபை தீர்மானித்தது.

 

இந்த தீர்மானத்தின் பின்னணியில் உள்ள விடயங்களை விளக்குவதற்காக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மத்திய வங்கி இன்று ஏற்பாடு செய்திருந்தது.

 

பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த தேவை தொடர்ந்தும் குறைந்த மட்டத்தில் இருப்பதாலும் பணவீக்கம் எதிர்பார்த்த மட்டத்தில் உள்ளதாலும் வெளிநாட்டுத்துறையின் தாக்கம் குறைவடைந்ததாலும் கொள்கை வட்டி வீதங்களைக் குறைக்கத் தீர்மானித்ததாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

views

239 Views

Comments

arrow-up