தெல்லிப்பழையில் வீட்டிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையிலுள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று(04) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 37 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவ தினத்தன்று குறித்த பெண்ணின் 16 வயதான மகன் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள காட்சிகள், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பெண்ணின் உடலில் காயங்கள் ஏதுமில்லை எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
205 Views
Comments