மட்டக்குளியில் பஸ் தீக்கிரை

மட்டக்குளி - அளுத்மாவத்தை பகுதியில் இன்று(03) காலை பஸ்ஸொன்று தீப்பிடித்துள்ளது.
தீ விபத்தின் போது பஸ்ஸில் எவரும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் பஸ்ஸொன்றே இதன்போது தீக்கிரையாகியுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் பணியில் 02 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை.
229 Views
Comments