நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்; மின்னல் தாக்கங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் இன்று (27) பிற்பகல் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அனுராதபுரம், மன்னார், காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடுமெனவும், இதன்போது ஏற்படக்கூடிய மின்னல் தாக்கங்கள் உள்ளிட்ட அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
205 Views
Comments