பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சர் தலைமையில் நேற்று(27) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்தே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி தலையீடு செய்துள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இதனிடையே, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தோட்டத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அமைச்சருக்கு தௌிவுபடுத்தினர்.
புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளைப் பாதுகாக்க விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
230 Views
Comments