வீட்டுப் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
29

வீட்டுப் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன

வீட்டுப் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன

கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் வீட்டுப் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

எரிபொருள் நெருக்கடி, பொருளாதார நெருக்கடிகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு செல்வதில் உள்ள சிரமம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

 

அதன்படி நிக்கவெரட்டிய, புறக்கோட்டை, மோதரை உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடந்த இரண்டு நாட்களாக இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

 

எவ்வாறாயினும், குடும்ப சுகாதார ஊழியர்களின் உதவியுடன் பிரசவம் மேற்கொள்ளப்பட்டதால், குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் நலமுடன் இருப்பதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

views

103 Views

Comments

arrow-up