எரிவாயு சிலிண்டர்கள் இன்று (18) விநியோகிக்கப்படாது - லிட்ரோ

புத்தாண்டை முன்னிட்டு மூடப்பட்ட கெரவலப்பிட்டி எரிவாயு சேமிப்பு முனையம் இன்று (18) மீண்டும் திறக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இன்று பொது சந்தைக்கு எரிவாயுவை விநியோகிக்கப்படப்போவதில்லை என லிட்ரோ தெரிவித்துள்ளது.
வணிக நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு இன்று வெளியிடப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் என்றும், நாளை முதல் பொதுச் சந்தைக்கு எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்றும் லிட்ரோ தெரிவித்துள்ளது.
448 Views
Comments