பிரதமரால் அரசியலமைப்பை திருத்துவதற்கான யோசனை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
18

பிரதமரால் அரசியலமைப்பை திருத்துவதற்கான யோசனை

பிரதமரால் அரசியலமைப்பை திருத்துவதற்கான யோசனை

நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க சபை மற்றும் நீதித்துறையை உள்ளடக்கி அரசியலமைப்பை திருத்துவதற்கான யோசனையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

மக்களுக்குப் பொறுப்புக்கூறும் அரசாங்கத்தை அமைக்குமாறு பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருத்தப்பட்ட அரசியலமைப்பு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என பிரதமர் நம்புவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

views

149 Views

Comments

arrow-up