யாழில் காணாமல் போயிருந்த இளைஞர் சடலமாக மீட்பு

மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் - மகேந்திரபுரம் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - பெரிய கல்லாறு பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக தனது தந்தையுடன் கடலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் நேற்று முன்தினம்(31) தனது வீட்டிலிருந்து புறப்பட்டு யாழ்.கொழும்புத்துறை பகுதிக்கு மீன்பிடிக்காக சென்ற போதே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளார்.
இதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
236 Views
Comments