2022 சா/த பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வௌியீடு

2022 கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.
www.doenets.lk எனும் இணையத்தள முகவரி ஊடாக மீளாய்வு பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை பரீட்சை பெறுபேறுகள் மீளாய்விற்காக 49,312 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
250,311 விடைத்தாள்கள் மீளாய்விற்கு உட்படுத்தப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0112 784 537, 0112 784 208, 0113 188 350 மற்றும் 0113 140 314 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுகொள்ள முடியும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
295 Views
Comments