மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
04

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள வருகை தருவோர், முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டியது இன்று(04) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

 

இந்த அறிவிப்பு நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்குமானது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

 

இதற்காக இரு முறைமைகள் பின்பற்றப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

 

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் மற்றும் தொலைபேசி அழைப்பின் ஊடாக நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியுமென மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

views

259 Views

Comments

arrow-up