ஜெர்மனி கப்பலில் பணிபுரிந்தபோது காணாமற்போன இலங்கை இளைஞர் தொடர்பில் விசாரணை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
03

ஜெர்மனி கப்பலில் பணிபுரிந்தபோது காணாமற்போன இலங்கை இளைஞர் தொடர்பில் விசாரணை

ஜெர்மனி கப்பலில் பணிபுரிந்தபோது காணாமற்போன இலங்கை இளைஞர் தொடர்பில் விசாரணை

ஜெர்மனிக்கு சொந்தமான MV Sanchuka கப்பலில் பணிபுரிந்து கொண்டிருந்த போது காணாமற்போன இலங்கையர் தொடர்பில், நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து சம்மேளனத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

 

இதற்கமைய, அந்த சம்மேளனத்தின் பரிசோதகர் ஒருவர் இலங்கை கப்பல் பணியாளர் பணிபுரிந்த கப்பலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளதாக தேசிய வர்த்தக கப்பல் சங்கத்தின் தலைவர் பாலித அத்துகோரல தெரிவித்தார். 

 

இதனிடையே, குறித்த இலங்கையர் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வணிகக் கப்பற்றுறை  செயலகம் தெரிவித்தது. 

 

இந்த விடயம் தொடர்பான முதற்கட்ட அறிக்கை தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார். 

 

விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதனால், அந்த தகவல்களை வௌியிட முடியாது எனவும் அவர் கூறினார். 

 

இதனிடையே, காணாமல் போன இலங்கை இளைஞரை தேடுவது தொடர்பில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளதாக தேசிய வர்த்தக கப்பல் சங்கம் குறிப்பிட்டது. 

 

ஜெர்மனிக்கு சொந்தமான MV Sanchuka கப்பலில் பணிபுரிந்து கொண்டிருந்த 21 வயதான சிராத் சந்தரு (Chirath Sandaru) எனும் இளைஞர் காணாமற்போயுள்ளார். 

 

மில்லனிய, உடுவர பகுதியை சேர்ந்த அவர், கொழும்பு மஹாநாம வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். 

 

இவர் MV Sanchuka கப்பலில் பணிபுரிவதற்காக ஜனவரி மாதம் 2 ஆம் திகதி சென்றுள்ளார்.

views

260 Views

Comments

arrow-up