இலங்கைக்கு வௌியில் கிளைகள் அமைக்கும் அனுமதியை வழங்கவில்லை - தமிழரசுக் கட்சி அறிக்கை

இலங்கைக்கு வெளியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எவ்வித அனுமதியையும் இதுவரை வழங்கவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் டொக்டர். ப.சத்தியலிங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளைகள் வடக்கு, கிழக்கு மாகாணம் , கொழும்பு மாவட்டத்தில் நீண்ட காலமாக செயற்பட்டு வருவதாக கட்சியின் பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலண்டனில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளை, ''இலங்கை தமிழ் அரசுக் கட்சி போரம்” ( ITAK FORUM) எனும் பெயரில் அமைக்கப்பட்டதாக செய்திகள் வௌியானதாக பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளைகளை ஸ்தாபிப்பதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கே உள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கைக்கு வெளியே கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எவ்வித அனுமதியும் இதுவரை வழங்கப்படவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் டொக்டர் ப.சத்தியலிங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
257 Views
Comments