பலசரக்கு பொருட்க​ளை இறக்குமதி செய்ய அனுமதி ; வர்த்தமானி வௌியீடு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
10

பலசரக்கு பொருட்க​ளை இறக்குமதி செய்ய அனுமதி ; வர்த்தமானி வௌியீடு

பலசரக்கு பொருட்க​ளை இறக்குமதி செய்ய அனுமதி ; வர்த்தமானி வௌியீடு

 மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை, சாதிக்காய், ஏலக்காய் உள்ளிட்ட பலசரக்கு பொருட்கள் மீள் ஏற்றுமதி நோக்கத்திற்காக இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கமைவாக குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு உள்நாட்டில் குறைந்தபட்சம் 35 வீதம் பெறுமதி சேர்க்கப்பட்டு மீள் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விடயம் தொடர்பான அறிவித்தல் அடங்கிய அதிவிசேட வர்த்தமானியும் வௌியிடப்பட்டுள்ளது. 

 

வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, உலர் மஞ்சளை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 

குறித்த பலசரக்கு பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு கடந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் முற்றாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

எவ்வாறாயினும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் டிசம்பர் 6ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கமைய, குறித்த பலசரக்கு பொருட்களை மீள் ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

views

269 Views

Comments

arrow-up