நீர் விநியோகேம் தொடர்பில் நாளாந்தம் 2000 முறைப்பாடுகள்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
10

நீர் விநியோகேம் தொடர்பில் நாளாந்தம் 2000 முறைப்பாடுகள்

நீர் விநியோகேம் தொடர்பில் நாளாந்தம் 2000 முறைப்பாடுகள்

நிலவும் அதிக வறட்சியுடனான வானிலையினால் நாளாந்த நீர் பயன்பாட்டின் அளவு உயர்வடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

 

இதன் காரணமாக அனைத்து நீர்வழங்கல் கட்டமைப்புகளும் அதிகபட்ச செயற்றிறனுடன் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அதன் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆரச்சி குறிப்பிட்டார். 

 

நீரின் பயன்பாடு அதிகரித்துள்ளமையினால் நாளாந்தம் 2000-இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அவர் கூறினார். 

 

நீர் விநியோகம் தொடர்பான சிக்கல்கள் குறித்து 1939 எனும் துரித அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்ய முடியுமென அவர் கூறினார். 

 

அத்துடன், அம்பத்தலை மற்றும் பியகம நீர் விநியோக மத்திய நிலையங்களில், சேற்றுநீர் உட்புகுவதைத் தடுப்பதற்காக நிர்மாணிக்கப்படும் தற்காலிக தடுப்புச்சுவரின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.

views

232 Views

Comments

arrow-up