24 மணித்தியாலங்களில் 653 பேர் கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
11

24 மணித்தியாலங்களில் 653 பேர் கைது

24 மணித்தியாலங்களில் 653 பேர் கைது

இன்று(11) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்பில் 653 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 586 பேரும் குற்றத்தடுப்பு பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள 67 சந்தேகநபர்களும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

ஹெரோயின், ஐஸ், கஞ்சா, மாவா போதைவில்லைகள் உள்ளிட்ட பல போதைப்பொருட்களையும் இந்த சுற்றிவளைப்பின் போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் பொலிஸ் விசேட பணியகத்தின் பட்டியலில் இருந்த 18 சந்தேகநபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

views

233 Views

Comments

arrow-up