பொத்துவில் - பானம கடலில் மூழ்கி வைத்தியர் உயிரிழப்பு

பொத்துவில் - பானம கடலில் நீராடச்சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடலில் நீராடச்சென்றிருந்த நிலையில், 2 பெண்கள் உள்ளிட்ட நால்வர் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர்காப்பு படையினரின் உதவியுடன் மூவர் காப்பற்றபட்டுள்ளனர்.
எனினும், 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கல்முனை வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
209 Views
Comments