நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இந்தியா பயணம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(09) காலை இந்தியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அவர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பதவியேற்பு விழா ராஷ்டிரபதி பவனில் இன்று(09) மாலை நடைபெறவுள்ளதுடன், 18ஆவது மக்களவையின் பதவியேற்பு விழாவிற்கு பல நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே, சீ ஷெல்ஸ் துணை ஜனாதிபதி அஹமத் அபிஃப், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
243 Views
Comments