இலங்கை இளைஞன் மலேசியாவில் உயிரிழப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
13

இலங்கை இளைஞன் மலேசியாவில் உயிரிழப்பு

இலங்கை இளைஞன் மலேசியாவில் உயிரிழப்பு

மலேசிய உணவகமொன்றில் தொழில் புரிந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது கொதிகலன்(Boiler) வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.

 

உணவகத்தில் தொழில் புரிந்த 24 வயதான மஸ்கெலியா பிரவுன்சிவிக் தோட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் டேவிட்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



மலேசியாவிலுள்ள உணவகமொன்றில் தொழில் புரிந்து வந்த நிலையில், கடந்த 25 ஆம் திகதி குறித்த இளைஞன் மீது கொதிகலனிலிருந்து வெந்நீர் உடலில் வீழ்ந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.



இதனையடுத்து குறித்த இளைஞன் மலேசியாவிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.



உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, இறுதிக் கிரியைகள் மஸ்கெலியா பிரவுன்சிவிக் தோட்டத்தில் இன்று(12) இடம்பெற்றன.

views

256 Views

Comments

arrow-up