திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 'மன்னா ரமேஷ்' கைது

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 'மன்னா ரமேஷ்' எனப்படும் ரமேஷ் பிரியஜனக கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் வசித்து வந்த அவர், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று(07) அதிகாலை நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
213 Views
Comments