பதுளை - மஹியங்கனை வீதியில் வாகன விபத்தில் தம்பதியர் உயிரிழப்பு

பதுளை - மஹியங்கனை வீதியின் புவக்கடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து பஸ்ஸூடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
பதுளை - மெதபத்தன பகுதியை சேர்ந்த 79 வயதான கணவனும் 76 வயதான மனைவியுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, தம்புள்ளை ஹபரன வீதியின் திகம்பத்தஹ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காயமடைந்துள்ளனர்.
லொறியுடன் கெப் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
44 வயதான பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
222 Views
Comments