கிரிக்கெட்டில் தோனியை தந்தையாக கருதும் இலங்கையின் வேகப்புயல்

கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனியை (MS Dhoni )தனது தந்தையாக கருதுவதாக இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீச பத்திரன(Matheesha Pathirana) தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,
மகேந்திர சிங் தோனியின் சிறிய அறிவுறுத்தல்கள் கூட தனக்கு மிகுந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது தந்தைக்குப் பிறகு தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தந்தையாக தோனியை தான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தோனி எப்போதும் அவரை கவனித்துக்கொள்வதாகவும், என்ன செய்வது என்பது குறித்து சில சிறிய ஆலோசனைகளை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
221 Views
Comments