ஆப்கானிஸ்தானில் கடும் மழை - 200 பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வௌ்ள அனர்த்தங்களில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பாக்லான் ( Baghlan) மாகாணம் கடுமையான வௌ்ள பாதிப்பிற்கு முகங்கொடுத்துள்ளது.
அங்கு 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலுமாகவோ, பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன.
பாக்லான் மாகாணத்தின் Baghlani Jadid மாவட்டத்தில் மாத்திரம் 1500 வீடுகள் சேதமடைந்துள்ளன. அங்கு நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தரவுகளை ஆப்கானிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
எனினும், தலிபான் அரசின் தரவுகளின் படி, நேற்று (10) இரவு மாத்திரம் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் மாகாணங்கள் பலவும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு Takhar மாகாணத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களையும் காயமடைந்தவர்களையும் மீட்புக் குழுவினர் மீட்டு வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் பாக்லான் மாகாண அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
215 Views
Comments