ஒரு நாள் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய சமரி அத்தப்பத்து

இலங்கை கிரிக்கெட் மகளிர் அணித் தலைவி சமரி அத்தப்பத்து, ஒரு நாள் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தியதன் ஊடாக அவர் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் சமரி அத்தப்பத்து ஆட்டமிழக்காது 195 ஓட்டங்களை குவித்தார்.
ஆடவர் மற்றும் மகளிருக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் போது பாரிய இலக்கினை கடந்து வெற்றிபெற்ற போட்டியொன்றில், அதிக ஓட்டங்களை பெற்ற வீராங்கனையாக சமரி அத்தப்பத்து காணப்படுகின்றார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் ஊடாக, 12 வருடங்களுக்கு பின்னர், இலங்கை அணி இந்த சாதனையை புதுப்பித்தது.
சமரி அத்தப்பது, கடந்த வருடம் ஜூலை மாதமும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைகளின் தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் பல சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ள சமரி அத்தப்பத்து, இதுவரை 101 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3513 ஓட்டங்களை குவித்துள்ளார்.
208 Views
Comments